Latest Updates
-
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்
தயிர் சாதத்தை இந்த பொருள் சேர்த்து ஒரு தடவை செஞ்சு பாருங்க - இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத டேஸ்ட்ல இருக்கும்
Cucumber Curd Rice Recipe in Tamil: தமிழர்களின் வாழ்க்கையில் சில உணவுகள் நீங்கா இடம்பெற்றுள்ளன. அப்படி நம் வாழ்க்கையில் இரண்டற கலந்துள்ள ஒரு உணவுதான் தயிர் சாதம். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் இறுதியில் தயிர் சாதம் சாப்பிட்டால்தான் நிறைவாக இருக்கும். சில சமயங்களில் தயிர் சாதமே பிரதான உணவாகவும் இருக்கும். தயிர் சாதத்துடன் காரமான சைடிஷ் வைத்து சாப்பிடும்போது அதற்கு இணையே இல்லை.

தயிர் சாதம் சுவையான உணவாக இருப்பதோடு அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. தயிர் சாதம் எளிதில் செய்யக் கூடியதாக இருந்தாலும் அதையும் சில வித்தியாசமான வழிகளில் கூடுதல் சுவையாக சமைக்கலாம். அப்படி ஒரு வித்தியாசமான மற்றும் சுவையான தயிர் சாதம்தான் வெள்ளரிக்காய் தயிர் சாதம். இதுபோல தயிர் சாதம் செய்தால் தயிர் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சுவையான வெள்ளரிக்காய் தயிர் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் தயிர் சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கப் பச்சரிசி (சமைக்காதது)
- 2 கப் தண்ணீர்
- 1 கப் துருவிய வெள்ளரிக்காய்
- தேவையான அளவு உப்பு
- 1 கப் கெட்டியான தயிர்
- அலங்கரிக்கக் கொத்தமல்லி இலைகள்
தாளிக்க:
- 3 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 2 சிட்டிகை பெருங்காயம்
- நீளமாக கீறிய 2 பச்சை மிளகாய்
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 வர மிளகாய்
- சிறிது கறிவேப்பிலை
செய்முறை:
- அரிசியை நன்றாகக் கழுவி, அதனுடன் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- இதை குக்கரில் வைத்து 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- விசில் அடங்கியதும் சாதத்தை நன்கு மசித்து ஆற விடவும்
- சாதம் ஆறியதும் அதனுடன் உப்பு, துருவிய வெள்ளரிக்காய் மற்றும் தயிர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்வதாக இருந்தால் கால் கப் பால் மற்றும் கால் கப் தயிர் அதிகமாக சேர்க்கவும்.
- இதனுடன் கேரட்டும் சேர்த்துக் கொள்ளலாம், இது சாதத்திற்கு அழகிய நிறத்தைக் கொடுக்கும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் கடுகு, கடலைப்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இதை மசித்து வைத்த சாதத்தின் மீது ஊற்றவும்.
- இதை ஒரு கரண்டியை வைத்து நன்றாகக் கலக்கவும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- இதை காரமான சைடிஷுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
