Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
மொறுமொறுப்பான... பன்னீர் நக்கட்ஸ்
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்படியான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த பன்னீர் கொண்டு சுவையான பன்னீர் நக்கட்ஸ் செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும்படியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்து கொடுக்க நினைத்தால், கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்த பன்னீர் கொண்டு சுவையான பன்னீர் நக்கட்ஸ் செய்து கொடுங்கள். இது மொறுமொறுப்பாக இருப்பதுடன், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் நக்கட்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் நக்கட்ஸ் ரெசிபியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* மைதா - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
* பால் - தேவையான அளவு
* பிரட் தூள் - 1/4 கப்
* கார்ன் ப்ளேக்ஸ் - 1/2 கப்
* உப்பு - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அதில் சுடுநீரை ஊற்றி பன்னீரை சிறிது நேரம் ஊற வையுங்கள்.
* பின் நீரை முழுமையாக வடிகட்டி வெளியேற்றிவிட்டு, பன்னீர் துண்டுகளில் மிளகாள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி விடுங்கள்.
* பின்பு கார்ன் ப்ளேக்ஸை பொடி செய்து, அதை பிரட் தூளுடன் சேர்த்து கலந்து விடுங்கள்.
* பிறகு பிரட்டி வைத்துள்ள பன்னீரை பிரட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* அடுத்து ஒரு பௌலில் மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகுத் தூள், பூண்டு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு பால் ஊற்றி பன்னீரை கோட்டிங் செய்யும் பதத்தில் கலந்து கொள்ளுங்கள்.
* பின் அதில் ஒவ்வொரு பன்னீர் துண்டுகளையும் போட்டு பிரட்டி தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
* அதன் பின், பன்னீர் துண்டுகளை மீண்டும் பிரட் தூளில் பிரட்டி தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
* இறுதியாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் நக்கட்ஸ் ரெடி!



Click it and Unblock the Notifications









