Just In
- 14 min ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 2 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 7 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 8 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- News
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள்...முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
- Movies
பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்!
- Finance
தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்!
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மொறுமொறுப்பான முந்திரி சிக்கன்
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாக, அதே வேளையில் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கனை விரும்பி சாப்பிடுபவராயின், அவர்களுக்கு சிக்கனைக் கொண்டு ஒரு சிம்பிளான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் செய்து கொடுத்தால், அவர்கள் இதை விரும்பி சாப்பிடுவதோடு, நீங்கள் நல்ல பாராட்டையும் பெறலாம்.
உங்களுக்கு மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முந்திரி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 1/4 கப்
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* வினிகர் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3-4 கப்
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகுத் தூள், சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் வரமிளகாயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சோயா சாஸ், வினிகரி, உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு முந்திரி மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு நீர் சுண்டும் வரை கிளறி, இறுதியாக மிளகுத் தூளைத் தூவி கிளறி இறக்கினால், மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi