Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்..
க்ரீமி சிக்கன் கிரேவி
இந்த வாரம் வித்தியாசமான சுவையுடைய சிக்கன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் ஹோட்டல்களில் மட்டுமே அதிகம் சுவைக்கக்கூடிய ரெசிபியைச் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் க்ரீமி சிக்கன் கிரேவியை ட்ரை செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்துள்ளீர்களா? இந்த வாரம் வித்தியாசமான சுவையுடைய சிக்கன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் நீங்கள் ஹோட்டல்களில் மட்டுமே அதிகம் சுவைக்கக்கூடிய ரெசிபியைச் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் க்ரீமி சிக்கன் கிரேவியை முயற்சி செய்யுங்கள். இந்த ரெசிபியை செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. மேலும் இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு க்ரீமி சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீமி சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* தயிர் - 2 கப்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தயக் கீரை - 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 1/2 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து பிசைந்து, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, சிறிது நீர் சேர்த்து 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி, பின் எஞ்சியிருக்கும் சிக்கன் ஊற வைத்த கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் மூடி கொண்டு மூடி வைத்து குறைவான தீயில் குறைந்தது 25 நிமிடம் வேக வைக்க வேண்டும். வேண்டுமானால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
* சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பிரஷ் க்ரீம், மிளகுத் தூள் மற்றும் காய்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறி ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான க்ரீமி சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications








