Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சுவையான... கார்ன் குடைமிளகாய் கிரேவி
உங்கள் வீட்டில் ஸ்வீட் கார்ன் உள்ளதா? அதேப் போல் குடைமிளகாயும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, புலாவ், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் ஸ்வீட் கார்ன் உள்ளதா? அதேப் போல் குடைமிளகாயும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கார்ன் குடைமிளகாய் கிரேவி சப்பாத்தி, புலாவ், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு தினமும் சப்பாத்திக்கு ஒரே மாதிரியான கிரேவி அல்லது சைடு டிஷ் செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இந்த கார்ன் குடைமிளகாய் கிரேவியை முயற்சித்துப் பாருங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு கார்ன் குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கார்ன் குடைமிளகாய் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் - 1 கப் (வேக வைத்தது)
* குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
* நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
செய்முறை:
* முதலில் கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் ஸ்வீட் கார்னை போட்டு, 3-4 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த தக்காளி வெங்காய பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சில நிமிடங்கள் கெட்டியாகும் வரை வதக்கி, 1/2 கப் நீரை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, குடைமிளகாயை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வதக்கிய குடைமிளகாயை கொதிக்கும் கிரேவியுடன் சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி சாஸ் மற்றும் வேக வைத்த கார்னை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி, கசூரி மெத்தியைத் தூவி இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், சுவையான கார்ன் குடைமிளகாய் கிரேவி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
