Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
தக்காளி சேர்க்காமல் குக்கரில் எப்படி சிக்கன் பிரியாணி செய்யணும்-ன்னு தெரியுமா?
Cooker Chicken Biryani Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் நீங்கள் செய்யும் பிரியாணி அவ்வளவு டேஸ்ட்டாக இருக்காதா? அப்படியானால் ஒருமுறை இந்த குக்கரை பிரியாணியை ட்ரை செய்து பாருங்கள்.
அதுவும் இந்த பிரியாணிக்கு அதிக மசாலா தேவையில்லை, தக்காளி தேவையில்லை. வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. இந்த தக்காளி சேர்க்காத குக்கர் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவை அருமையாகவும் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி சேர்க்காத குக்கர் சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சேர்க்காத குக்கர் சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 3 கப்
சிக்கனை ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* எலுமிச்சை - பாதி
* தயிர் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணிக்கு...
* எண்ணெய் - 1/2 கப்
* பிரியாணி இலை - 2
* கிராம்பு - 7
* ஏலக்காய் - 8
* பட்டை - 3 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 3 (மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்)
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - தேவையான அளவு
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை
ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் சிக்கனை நன்கு கழுவிவிட்டு, கழுவிய சிக்கனை ஒரு
பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சை மிளகாய், மிளகாய்
தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா,
பாதி எலுமிச்சையின் சாறு, தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி நன்கு பிசைந்து, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் வதக்கிய வெங்காயத்தை
பாதி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம்
மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் 4 கப் நீரை ஊற்றி, பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு
சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் முதலில் பாதி பாசுமதி அரிசியை
சேர்க்க வேண்டும்.
* அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை சிறிது தூவி, அதன் பின்
சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவ வேண்டும்.
* பின்பு மீதமுள்ள அரிசியை சேர்த்து பரப்பி, அதன் மேல் மீதமுள்ள
வதக்கிய வெங்காயத்தைத் தூவி, மேலே கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத்
தூவ வேண்டும்.
* பிறகு மேலே நெய்யை ஊற்றி, பிரியாணி மசாலாவை சேர்த்து குக்கரை மூடி,
மிதமான தீயில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் முழுவதும் போன பின் குக்கரைத் திறந்தால், சுவையான தக்காளி
சேர்க்காத குக்கர் சிக்கன் பிரியாணி தயார்.
Image Courtesy: Freepik



Click it and Unblock the Notifications




