Latest Updates
-
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்
சாம்பார் தென்னிந்தியாவில் பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அதில் கோயம்புத்தூர் ஸ்டைல் வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருப்பதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
சாதத்துடன் சேர்த்து சாப்பிட சிறந்த காம்பினேஷன் என்றால் அது சாம்பார் தான். அந்த சாம்பார் தென்னிந்தியாவில் பல விதங்களில் தயாரிக்கப்படுகிறது. அதில் கோயம்புத்தூர் ஸ்டைல் வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருப்பதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். உங்களுக்கு கோயம்புத்தூர் ஸ்டைல் சாம்பாரை உங்கள் வீட்டில் செய்ய வேண்டுமென்று ஆசையாக உள்ளதா?

கீழே கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சாம்பாரை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்காய் - 1 (நீளத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
* நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 15 முதல் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துவரம் பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முருங்கைக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் போதுமான அளவு நீரை ஊற்றி 10 நிமிடம் காய்கறி வேகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மல்லி, வெந்தயம், பெருங்காயத் தூள், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, காய்கறி வேக வைத்த நீரை சிறிது ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த மசாலாவை வெங்காயம் தக்காளி உள்ள வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சாம்பாருடன் சேர்த்து மீண்டும் சாம்பாரை ஒரு 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே நெய் ஊற்றினால், சுவையான கோயம்புத்தூர் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications