Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
1 கப் அரிசி மாவு இருந்தா இந்த ஆந்திரா ஸ்பெஷல் தேங்காய் வடை சுடுங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!
Coconut Vada Recipe in Tamil: நம் அனைவருக்குமே மிகவும் விருப்பமான மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத்தான் தேடும். மாலை மட்டுமல்ல காலையும் வடைதான் நம்முடைய பிரதான விருப்பமாக இருக்கும். வழக்கமாக உளுந்த வடை அல்லது பருப்பு வடை போன்றவற்றைதான் சாப்பிடுவோம்.
தமிழ்நாட்டை தாண்டி விட்டால் நாம் பலவகையான வடைகளை சுவைக்கலாம். அப்படி ஆந்திராவை சேர்ந்த ஒரு ஸ்பெஷல் வடைதான் தேங்காய் வடை. இந்த வடை கடினமானதாக இருக்காது. இது வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே கொஞ்சம் மென்மையாகவும் இருக்கும். இந்த வடை 2 நாட்கள் வரை ப்ரெஷாக இருக்கும். இந்த ஆந்திரா ஸ்பெஷல் சூப்பரான தேங்காய் வடையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவயானைப் பொருட்கள்:
- 1 கப் அரிசி மாவு
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/2 அங்குல இஞ்சி
- 1 தேக்கரண்டி சீரகம்
- 4 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- சூடான தண்ணீர் தேவைக்கேற்ப
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
- இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தை மிக்ஸியில் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவில் துருவிய தேங்காய், உப்பு மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரைத்து வைத்த பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கிளறவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரைச் சேர்த்து, முதலில் ஒரு கரண்டியால் கலந்து, பின்னர் பூரி மாவைப் போல இறுக்கமான மாவாக கைகளால் பிசையவும்.
- ஒரு பாலிதீன் தாளில் 2-3 சொட்டு எண்ணெயை ஊற்றி, உங்கள் கையில் எண்ணெயை தேய்த்துக் கொண்டு, முறுக்கு போல தட்டையாக உருட்டவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்த மாவை மெதுவாக போட்டு வறுக்கவும்.
- இருபக்கமும் பொன்னிறமாக மாறியதும் அதை ஓரமாக வைக்கவும். ஆறியவுடன் காரமான தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பரான தேங்காய் வடை ரெடி!



Click it and Unblock the Notifications









