Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1/2 கப் பொட்டுக்கடலையும், 1 கப் இட்லி மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க..
Coconut Susiyam Recipe In Tamil: மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு பசியுடன் குழந்தைகள் வருவார்கள். அப்போது குழந்தைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் 1/2 கப் பொட்டுக்கடலையும், 1 கப் இட்லி மாவும் இருந்தால், ருசியான தேங்காய் சுசியத்தை செய்யுங்கள்.
இந்த தேங்காய் சுசியம் ஒரு சிறந்த மாலை நேர மற்றும் பசியை ஆற்றும் ஸ்நாக்ஸாக இருக்கும். முக்கியமாக இந்த சுசியம் வழக்கமாக செய்யும் சுசியத்தை விட செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சுசியத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சுசியம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* நெய் - 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 மூடி
* வெல்லம் - 1 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
மேல் மாவிற்கு...
* இட்லி மாவு - 1 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை போட்டு நன்கு அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லத்தை பொடித்து சேர்த்து,
அதில் 1/4 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை
வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நெய்
சேர்த்து உருகியதும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடித்த பொட்டுக்கடலை பொடியை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல நீரை சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* கலவையானது நன்கு திரண்டு வந்ததும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு தட்டில் வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 கப் இட்லி மாவை எடுத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எடுத்து,
மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்துக்
கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் மாவில் பிரட்டி,
எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான தேங்காய் சுசியம் தயார்.



Click it and Unblock the Notifications