Latest Updates
-
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க.. -
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
60 லட்சம் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள உடலின் மிகப்பெரிய சுடுகாடு எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
டிசம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்கு மகத்தான வெற்றியும், பணமும் குவியப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பன் தோசையும், பொட்டுக்கடலை சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 20, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு லாபம் கொட்டும் நாளாக இருக்குப்போகுதாம் -
நாளை உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. அவசரப்படக்கூடாது.. -
சூரியன் தனுசு ராசிக்குள் செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Coconut Rava Dosa With Tomato Chutney Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? சட்டென்று ஒரு காலை டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் ரவையும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு தேங்காய் ரவா தோசை சுடுங்கள். இதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னி அருமையாக இருக்கும். இந்த டிபன் காம்போவை செய்தால், நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த டிபன் சட்டென்று செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் ரவா தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* சின்ன வெங்காயம் - 6
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
தக்காளி சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு மிக்சர் ஜாரில் ரவை, தேங்காய், சின்ன வெங்காயம்,
சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மூடி வைத்து
10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து, 10 நொடிகள் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தக்காளி சட்னி
தயார்.
* பின்னர் ஊற வைத்த மாவு தோசை மாவின் பதத்திற்கு இருக்குமாறு, சிறிது
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில்
ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசையாக சுட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும்
பின்னும் வேக வைத்து எடுத்தால், தேங்காய் ரவா தோசை தயார்.



Click it and Unblock the Notifications
