தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Coconut Rava Dosa With Tomato Chutney Recipe In Tamil: காலையில் தோசை சுட மாவு இல்லையா? சட்டென்று ஒரு காலை டிபனை செய்ய வேண்டுமா? வீட்டில் ரவையும், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு தேங்காய் ரவா தோசை சுடுங்கள். இதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி சட்னி அருமையாக இருக்கும். இந்த டிபன் காம்போவை செய்தால், நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த டிபன் சட்டென்று செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

Coconut Rava Dosa With Tomato Chutney How To Make Thengai Rava Dosa With Thakkali Chutney

உங்களுக்கு இந்த தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் ரவா தோசை மற்றும் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வறுத்த ரவை - 1 கப்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* சின்ன வெங்காயம் - 6
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு

தக்காளி சட்னிக்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 4 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு மிக்சர் ஜாரில் ரவை, தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, மூடி வைத்து 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து வறுத்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கொத்தமல்லியை சேர்த்து, 10 நொடிகள் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தக்காளி சட்னி தயார்.
* பின்னர் ஊற வைத்த மாவு தோசை மாவின் பதத்திற்கு இருக்குமாறு, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசையாக சுட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், தேங்காய் ரவா தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 2, 2026, 8:45 [IST]
Desktop Bottom Promotion