Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தேங்காய் புதினா சட்னி ரெசிபி... இந்த மாதிரி சூப்பரா சட்னி அரைச்சா எவ்வளவு இட்லி சுட்டாலும் பத்தாது....!
Pudina Coconut Chutney Recipe in Tamil: அனைத்து வீடுகளிலும் பொதுவான காலை உணவாக இருக்கும் இட்லி, தோசையின் சுவை எப்போதும் அதனுடன் பரிமாறப்படும் சட்னியின் சுவையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. சட்னி என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது தேங்காய் சட்னிதான். இதில் சிறப்பு என்னவென்றால் இட்லி அனைத்து சட்னிகளுடனும் சிறப்பாக ஒத்துப்போகும்.
இட்லிக்கு புதினா சட்னி அரைக்கும் போது 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள். புதினா சட்னியே சூப்பராக இருக்கும் போது அதை புது விதத்தில் ஸ்பெஷலாக அரைத்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.

இதற்கு முன்னாள் தேங்காய் புதினா சட்னி அரைத்துள்ளீர்களா? இல்லையெனில் இப்போது ட்ரை பண்ணுங்க. இட்லி, தோசைக்கு வேற லெவல் டேஸ்ட்டில் இருக்கும். இந்த பதிவில் தேங்காய் புதினா சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- ½ கப் புதினா இலைகள்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- இஞ்சி - 1 துண்டு
- துருவிய தேங்காய் - 1 கப்
- பச்சை மிளகாய் - 3
- பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை சூடாக்கவும்.
- புதினா, கறிவேப்பிலை மற்றும் இஞ்சியை போடவும். புதினா மற்றும் கறிவேப்பிலை மிருதுவாக மாறும் வரை வறுக்கவும், குறைந்த வெப்பத்தில் அடிக்கடி கிளறவும்.
- புதினா நன்கு வதங்கியதும் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும். அதேபோல எண்ணெயையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும். புதினா நன்கு ஆறும் வரை காத்திருக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொட்டுக்கடலையைச் சேர்க்கவும்.
- பின்னர் வதக்கி வைத்த புதினா இலை மற்றும் இஞ்சி கலவையையும் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். எந்த துண்டுகளும் இல்லாமல் மென்மையாக பேஸ்ட் போல அரைக்கவும்.
- உங்களுக்கு சட்னி எந்த பதத்தில் வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
தாளிக்க:
- எடுத்து வைத்த எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி அதில் கடுகைப் போடவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை சேர்க்கவும், பின்னர் பெருங்காயத்தைச் சேர்க்கவும்.
- பின்னர் சட்னியை இந்த கடாயில் ஊற்றி நன்கு கிளறவும்.
பின்குறிப்பு: ப்ரெஷான புதினா இலைகளைப் பயன்படுத்த வேண்டும். அதேசமயம் தண்டுகள் இல்லாமல் வெறும் இலைகளை மட்டுமே பயன்படுத்தவும். தண்டுகளைச் சேர்ப்பதால் சட்னியின் சுவை கசப்பானதாக மாறலாம்.



Click it and Unblock the Notifications