Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
தேங்காய் பாயாசம்
சில பாயாச பிரியர்கள், தங்கள் வீடுகளில் மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக பாயாசத்தை செய்து சுவைப்பார்கள். இத்தகைய பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பாயாசம்.
பொதுவாக பண்டிகை காலங்களில் அல்லது வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் நிச்சயம் அனைத்து வீடுகளிலும் பாயாசத்தை ஸ்பெஷலாக செய்வார்கள். சில பாயாச பிரியர்கள், தங்கள் வீடுகளில் மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக பாயாசத்தை செய்து சுவைப்பார்கள். இத்தகைய பாயாசத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் பாயாசம்.

இன்று உலக தேங்காய் தினம். ஆகவே இந்த தினத்தன்று தேங்காய் கொண்டு ஸ்பெஷலாக செய்யப்படும் தேங்காய் பாயாசத்தை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். முக்கியமாக இந்த பாயாசம் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையாக இருக்கும். இப்போது தேங்காய் பாயாசத்தின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி அல்லது வேறு அரிசி - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப் அல்லது தேவையான அளவு
* வெல்லம் - 1 1/2 கப்
* தேங்காய் - 1/2 கப் (துருவியது)
* கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை:
* முதலில் மிக்ஸியில் அரிசியைப் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, நீர் ஊற்றி, வெல்லம் உருகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த அரிசியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வாணலியை மூடி குறைவான தீயில் 30-35 நிமிடம் அரிசியை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* சாதமானது நன்கு குலைந்ததும், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட், வெல்லப் பாகு சேர்த்து நன்கு கிளறி விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் 10 நிமிடம் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்போது கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
* அதன் பின் அந்த பாயாசத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி விட வேண்டும்.
* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து, பின் அதை பாயாசத்தின் மேல் ஊற்றி கிளறினால், சுவையான தேங்காய் பாயாசம் ரெடி!



Click it and Unblock the Notifications