Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தேங்காய்ப்பாலை வைச்சு இந்த இனிப்பை செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Coconut Milk Kunukku Recipe in Tamil: தேங்காய் பால் உடலுக்கு ஏக்கப்பட்ட நன்மை தரக் கூடியது. இதை தாய்ப்பாலுடன் கூட ஒப்பிடக் கூடிய அற்புதமான குணங்களை கொண்டிருக்கிறது. தேங்காய்ப்பால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, ஏராளமான குளிர்கால சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்க கூடிய ஒரு அற்புத பொருளாகும்.
இது கேரளா பெண்களை போன்று அடர்ந்த கருமையான கூந்தலை கொடுக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. ஆனால் தினமும் வெறும் தேங்காய் பால் மட்டும் சாப்பிட்டால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் மற்றும் நாளடைவில் சலிப்பைக் கூட ஏற்படுத்தும். இதை தவிர்க்க தேங்காய் பால் வைத்து சுவையாக செய்ய கூடிய இந்த தேங்காய் பால் குணுக்கை முயற்சி செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்:
- உளுந்து - 1 கப்
- அரிசி - ½ கப்
- ஏலக்காய் - 2
- தேங்காய் - 1
- உப்பு - ¼ ஸ்பூன்
- வெல்லம் - 1 கப்
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- முந்திரி - 10
- பாதாம் - 10
- பிஸ்தா - 10
- உலர் திராட்சை - 10
- உலர் திராட்சை கருப்பு - 10
செய்முறை:
- உளுந்து மற்றும் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவிடவும்.
- பின் இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து நன்றாக அலசி சுத்தம்
செய்து கொள்ளவும்.
- தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து
கொள்ளவும்.
- அதனுடன் உப்பு சேர்த்து மிதமான அளவில் தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
- பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- பின் அதில் அரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப
எடுத்து கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காயை சேர்த்து தண்ணீர்
சேர்க்காமல் அரைக்கவும்.
பின் தண்ணீர் சேர்த்து அரைத்தால் தேங்காய் பால் நன்றாக வரும்.
- அதை சுத்தமான வெள்ளை துணியில் நன்றாக வடித்து எடுத்து கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- உங்கள் சுவைக்கு ஏற்ப வெல்லத்தை கூட்டி குறைத்து கொள்ளலாம். பின் பொரித்து வைத்த உருண்டைகளை தேங்காய் பாலில் சேர்த்து நன்றாக ஊற விடவும்.
- உலர் திராட்சைகளை தண்ணீர் நன்றாக அலசி 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு திராட்சைகளை தேங்காய் பாலில் சேர்க்கவும்.
- முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கி தேங்காய் பாலில் சேர்க்கவும்.
- உலர் திராட்சை மற்றும் பிஸ்தாவின் நிறம் குழந்தைகளை ஈர்க்கும்.
- நீங்கள் வேண்டுமென்றால் இவற்றை தவிர்த்து விட்டு கூட செய்து கொள்ளலாம்.
- இதை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் அல்லது இரவு உணவாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.



Click it and Unblock the Notifications