Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தேங்காய் சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை எக்ஸ்ரா சேர்த்து அரைங்க.. லேற லெவல்-ல இருக்கும்...
Coconut Coriander Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியைத் தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் தேங்காய் சட்னியை தான் அதிகம் செய்வீர்களா?அதோடு தேங்காய் சட்னியை ஒரே மாதிரி செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமாக செய்தால், போரடிக்காமல் தேங்காய் சட்னியை சாப்பிடலாம்.
அதுவும் தேங்காய் சட்னியை அரைக்கும் போது அத்துடன் குறிப்பிட்ட சில பொருட்களை அதிகமாக சேர்க்கும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ரெசிபி தான் தேங்காய் கொத்தமல்லி சட்னி. இந்த சட்னி அனைத்து விதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எணணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* இஞ்சி- 1 சிறிய இன்ச்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* தேங்காய் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக
ப்ரை செய்ய வேண்டும்.
* பின்னர் அதில் பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தேங்காய், புளி சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றி, சிறிது நீரை ஊற்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
தேங்காய் கொத்தமல்லி சட்னி யார்.



Click it and Unblock the Notifications