Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
அடுத்தமுறை தேங்காய் சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேத்துக்கோங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Spicy Coconut Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? பெரும்பாலும் உங்கள் வீட்டில் இதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியைத் தான் செய்வீர்களா?
அதுவும் ஒரே ஸ்டைலில் தான் தேங்காய் சட்னியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை தேங்காய் சட்னி செய்வதாக இருந்தால், சட்னி அரைக்கும் போது ஒரு பொருளை கூடுதலாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருன்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 2
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் 1 கப், 2 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை, 1/2 இன்ச் இஞ்சி, 2 பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் முக்கியமாக சுவையை அதிகரிக்க 2 முந்திரியை சேர்க்க
வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்ததும், கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து
கிளறினால், சுவையான தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
