Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தேங்காய் சட்னியை ஒருமுறை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...
Coconut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி அல்லது தோசை தான் காலை டிபனாக இருக்குமா? அதுவும் இதற்கு அடிக்கடி தேங்காய் சட்னியைத் தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? எப்போதும் தேங்காய் சட்னியை ஒரே சுவையில் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் தேங்காய் சட்னியை வேறு விதத்தில் அரையுங்கள்.
தேங்காய் சட்னியை வேறு எப்படி அரைப்பது என்று கேட்கலாம். பொதுவாக தேங்காய் சட்னியில் பச்சை மிளகாய் தான் சேர்ப்போம். ஆனால் அடுத்தமுறை தேங்காய் சட்னி அரைப்பதாக இருந்தால் வரமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தாளிப்பதற்கு நல்லெண்ணெயை பயன்படுத்துங்கள். இதனால் சட்னி இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு வரமிளகாய் சேர்த்து தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வரமிளகாய் சேர்த்து செய்யும் தேங்காய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 4 சிறிய பல்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காய், 5-6
வரமிளகாய், பாதி வெங்காயம் மற்றும் 4 சிறிய பல் பூண்டு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப கல் உப்பு, சிறிய துண்டு புளி, 2 டேபிள்
ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னி இட்லிக்கு என்றால் சற்று நீரை அதிகமாகவும், தோசைக்கு
என்றால், நீரை குறைவாகவும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெயை 3 டீஸ்பூன் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான தேங்காய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications