Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சௌ சௌ காயை இப்படி ஒருவாட்டி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி கேட்டு சாப்பிடுவாங்க..
Chow Chow Poriyal Recipe In Tamil: இதுவரை நீங்கள் சௌ சௌ காயைக் கொண்டு கூட்டு, சாம்பார் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த சௌ சௌ காயைக் கொண்டு அட்டகாசமான சுவையான பொரியல் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், சௌ சௌ பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
முக்கியமாக சௌ சௌ காய் பிடிக்காதவர்களுக்கு, இப்படி அந்த காயை பொரியல் செய்து கொடுக்கும் போது, விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவில் இதன் சுவை அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பொரியல் செய்வதற்கு 10 நிமிடம் போதும். சட்டென்று செய்துவிடலாம்.

உங்களுக்கு சௌ சௌ பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக
நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* சௌ சௌ - 1/2 கிலோ (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/4 ப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமானதும், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு நறுக்கி வைத்துள்ள சௌ சௌ காயை சேர்த்து, 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து, 5-8 நிமிடம் காயை வேக வைக்க வேண்டும்.
* காய் வேவதற்குள், மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய்
மற்றும் சீரகம் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து
நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சௌ சௌ
பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications