Latest Updates
-
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க... -
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது!
சாக்லேட் சாண்ட்விச்
சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச்.
தற்போது சாண்ட்விச் பலரது காலை உணவாக உள்ளது. சிலருக்கு இது பசியைப் போக்கும் நல்ல ஸ்நாக்ஸாகவும் உள்ளது. சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச். இது சுவையாக இருப்பதோடு, வயிற்றையும் நிரப்பும். நீங்கள் சாக்லேட் சாண்ட்விச்சை கடைகளில் தான் சாப்பிட்டுள்ளீர்கள் என்றால், இனிமேல் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு சாக்லேட் சாண்ட்விச் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சாக்லேட் சாண்ட்விச் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* டார்க் சாக்லேட் துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.
* பின் பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.
* இதேப் போன்று மற்ற இரண்டு பிரட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்து கொண்டால், சாக்லேட் சாண்ட்விச் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
