Latest Updates
-
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம் -
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிகளின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
ப்ளீச்சிங் செஞ்ச மாதிரி முகம் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
சின்ன வெங்காயத்துடன் தக்காளி சேர்க்காம இப்படி ஒருமுறை சட்னி செய்யுங்க.. இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்..
Chinna Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் காலை வேளையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இதனால் தினமும் என்ன சட்னி செய்வதென்று யோசிப்பதே பெரும் வேலையாக இருக்குமா?
உங்களின் வசதிக்காக இன்று நாங்கள் உங்களுக்காக ஒரு அற்புதமான சுவையைக் கொண்ட சட்னியைப் பற்றி தான் கூறப் போகிறோம். அது தான் சின்ன வெங்காய சட்னி. இதற்கு தக்காளி எதுவும் சேர்க்க தேவையில்லை. அளவான பொருட்களே போதுமானது. முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சின்ன வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சின்ன வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 300 கிராம்
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், வெல்லம், புளி சேர்த்து குறைவான
தீயில் வைத்து, பச்சை வாசனை போக வதக்கி இறக்கி, குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் ஊற்றினால், சுவையான சின்ன வெங்காய
சட்னி தயார்.
Image Courtesy: Nithya's Kitchen



Click it and Unblock the Notifications