Latest Updates
-
தட்டைப்பயறு தேங்காய்ப்பால் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
முட்டையை வைச்சு இந்த மாதிரி மசாலா கீமா பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஒரு டிராபிக் சிக்னல் கூட இல்லாத உலகின் அதிசய நாடு எது தெரியுமா? நம்ம பக்கத்து நாடுதானாம் -
காரசாரமான ஆந்திரா பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
சனி வக்ர பெயர்ச்சியைத் தொடங்குவதால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட இந்தியாவின் அதிசயக் கோவில் - எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
செட்டிநாடு இறால் தொக்கு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
உங்க வீட்ல பன்னீர் இருக்கா? அப்ப இந்த மாதிரி சில்லி பன்னீர் செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்...!
Chilli Paneer Recipe in Tamil: கோடைகாலம் வந்தாலே குழந்தைகள் வீட்டில் செலவழிக்கும் நேரம் அதிகமாகிவிடும். எனவே அவர்கள் அடிக்கடி நொறுக்குத்தீனி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால், அதை வைத்து ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி பன்னீர். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் காரசாரமாக சூப்பராக இருக்கும். இந்த பதிவில் சூப்பரான சில்லி பன்னீரை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- பன்னீர் - 200 கிராம்
- நறுக்கிய வெங்காயம் - 1
- குடை மிளகாய் - 1
- பூண்டு - 6
- இஞ்சி - சிறிய துண்டு
- பச்சை மிளகாய் - 3
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
- ரெட் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
- கிரீன் சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
- சோயா சாஸ் - 2 ஸ்பூன்
- வினிகர் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- வெங்காய தாள் - ஒரு கைப்பிடியளவு
பொரிக்க தேவையான பொருட்கள்:
- மைதா - 3 ஸ்பூன்
- சோள மாவு - 6 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - ½ ஸ்பூன்
- மிளகு தூள் - 2 ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பன்னீரை சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- பின்னர் மைதா மற்றும் சோள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் மிளகு தூள், உப்பு, சிறிது சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
- பின்னர் தேவையான அளவு நீர் சேர்த்து லேசாக கெட்டியான கலவையாக நன்கு பிசையவும். அதனுடன் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர், கிரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ் ஆகியவற்றை சேக்கவும். இதனை நன்றாக நன்கு கலக்கி தனியாக வைக்கவும்.
- பன்னீர் பொரித்து மீதமுள்ள எண்ணெயில் பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயம் மற்றும் குடை மிளகாய், சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- பின்னர் மிளகாய் தூளை சேர்க்கவும். பிறகு சாஸ் கலவை சேர்த்து நன்கு கலந்து, பின்பு பொரித்த பன்னீர் மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து 2 நிமிடம் கிளறினால் சுவையான் சில்லி பன்னீர் தயார்.



Click it and Unblock the Notifications