Latest Updates
-
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க..
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Chilli Garlic Fried Rice Recipe in Tamil: தினமும் காலையில் உங்கள் குழந்தைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு ரெஸ்டாரண்ட்களில் கிடைக்கும் ப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்படியெனில் வழக்கமான தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸை ஒருமுறை செய்து கொடுங்கள்.

இதுபோன்ற சுவையான மதிய உணவு செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இந்த ஹோட்டல் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் செய்வது மிகவும் எளிதானதாகும். மேலும் இதை வீட்டிலுள்ள சாதாரண பொருட்களை வைத்தே எளிதில் செய்து விடலாம்.
உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாசுமதி அரிசி - 1/2 கப்
- நறுக்கிய பூண்டு - 3 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 3
- நறுக்கிய குடைமிளகாய் - 3 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 ஸ்பூன்
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி - 1 ஸ்பூன்
- வெங்காயத்தா ளின் பச்சைப்பகுதி - அலங்கரிக்க
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பிரஷர் குக்கரில் பாஸ்மதி அரிசியை 3/4 கப் தண்ணீருடன் சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேக வைக்கவும். இதை வேக வைக்கும்போது சிறிதளவு உப்பு மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்க்கவும்.
- வெந்தவுடன், இதை ஒரு தட்டில் பரப்பி தனியாக ஆற வைக்கவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சர்க்கரை சேர்க்கவும். மிளகாயும், சர்க்கரையும் சேர்ந்து இந்த ப்ரைடு ரைஸ்-க்கு நல்ல சுவையைக் கொடுக்கும்.
- சர்க்கரை சேர்த்த பிறகு, வர மிளகாயைச் சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
- மிளகாய் நிறம் மாறியதும் நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.
- இதை மிதமான தீயில் வைத்து பூண்டு கருகாமல் வறுக்கவும்.
- பூண்டு மிக விரைவாக வெந்துவிடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
- பின்னர் வெங்காயத் தாளின் வெள்ளைப்பகுதியைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் 1-2 நிமிடங்கள் வதக்கி, நறுக்கிய குடைமிளகாயைச் சேர்க்கவும்.
- நீங்கள் விருப்பப்பட்டால் நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி போன்றவற்றை இந்த நேரத்தில் சேர்க்கலாம்.
- குடைமிளகாய் வதங்கும் வரை நன்கு வதக்கவும்.
- இப்போது சோயா சாஸைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- சாஸ் பச்சை வாசனை போனதும் வேக வைத்த சாதத்தை இதில் சேர்க்கவும்.
- மென்மையாக நன்றாகக் கலந்து, 2-3 நிமிடங்கள் கிளறவும்.
- வெங்காயத்தாளின் பச்சைப் பகுதியை வைத்து அலங்கரிக்கவும்.
- அவ்வளவு சில்லி கார்லிக் ரைஸ் ரெடி. இதை தக்காளி சாஸ் அல்லது மஞ்சூரியனுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
