Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மீந்து போன சப்பாத்தி இருந்தா அதை இப்படி செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Chilli Chapati Recipe in Tamil: இட்லி, தோசைக்கு பிறகு பெரும்பாலான இந்திய வீடுகளில் பிரதான உணவாக இருப்பது சப்பாத்திதான். சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்ற நம்பிக்கை மிகவும் பிரபலமானதும் தோசைக்கு மாற்றாக சப்பாத்தி பெரும்பாலான இந்திய வீடுகளுக்குள் நுழைந்து விட்டது. சப்பாத்தியில் சில ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதையே தினமும் சாப்பிட்டால் நிச்சயம் விரைவில் வெறுத்துவிடும்.
சப்பாத்தி அதிகம் செய்து மீந்து விட்டால் அடுத்த நாள் காலையில் தூக்கிதான் எறிவோம். அதற்குப் பதிலாக அதனை வேறு வடிவில் சமைத்துக் கொடுத்தால் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி மீந்து போன சப்பாத்தியில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கக்கூடிய சுவையான மற்றும் சூப்பரான உணவுதான் சில்லி சப்பாத்தி.

இந்த சுவையான சில்லி சப்பாத்தியை சூடான சப்பாத்தியிலும் செய்யலாம். குழந்தைகள் விரும்பும் இந்த சில்லி சப்பாத்தியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- சப்பாத்தி - 4
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- நறுக்கிய தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 2
- தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- காஷ்மீர் மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
- சப்பாத்தியை முதலில் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
- பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி
வைத்துக் கொள்ளவும். அதேபோல பச்சை மிளகாயை இரண்டாக கீறி
வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை
மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும், சிறிதளவு உப்பு
சேர்த்து தக்காளி குலையும் வரை நன்கு வதக்கவும். தக்காளி நன்கு
வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், காஷ்மீர் மிளகாய் தூள்
சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அதில் நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்தி
துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை
அணைக்கவும்.
- சுவையான சில்லி சப்பாத்தி ரெடி. மீந்து போன சப்பாத்தியை இவ்வாறு
செய்து சுவையாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடித்த
உணவாக இருக்கும்.



Click it and Unblock the Notifications