Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நாவூற வைக்கும்... சில்லி பிரட்
உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி பிரட். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு மற்றும் வீட்டில் உள்ளோருக்கு ருசியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி பிரட். இது குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால், பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு சில்லி பிரட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி பிரட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* ஸ்பிரிங் ஆனியன் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சாஸ் செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* வரமிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன் (2-3 வரமிளகாயை சுடுநீரில் ஊற வைத்து, நீர் சேர்த்து நன்கு விழுது போல் அரைத்துக் கொள்ளவும்)
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* வினிகர் அல்லது எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபின் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வரமிளகாய் விழுது சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பிரட் துண்டுகுளை சேர்த்து நன்கு கிளறி, மேலே ஸ்பிரிங் ஆனியனைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சில்லி பிரட் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
