Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ருசியான... சிக்கன் சூப்
நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.
சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சிக்கன் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் கீழே சிக்கன் சூப் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: செட்டிநாடு முட்டை பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தண்ணீர் - 2 கப்
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 10
* கொத்தமல்லி - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேறிப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 சின்ன வெங்காயம்
செய்முறை:
* முதலில் சிக்கனை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், கொத்தமல்லி, மிளகு, சீரகத்தைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைந்தது 3-5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு தேவையான அளவு நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் சூப் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications










