Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சிக்கன் ரைஸ் லைம் சூப்
நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? சூப் அதிகம் குடிப்பீர்களா? தினமும் ஒரே மாதிரியான சூப் குடித்து அலுத்துவிட்டதா? அப்படியானால் சிக்கன் ரைஸ் லைம் சூப் குடியுங்கள்.
நீங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் இருக்கிறீர்களா? சூப் அதிகம் குடிப்பீர்களா? தினமும் ஒரே மாதிரியான சூப் குடித்து அலுத்துவிட்டதா? அப்படியானால் சிக்கன் ரைஸ் லைம் சூப் குடியுங்கள். இந்த சூப் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. முக்கியமாக இந்த சூப்பை ஒரு பௌல் குடித்தால், அது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும்.

உங்களுக்கு சிக்கன் ரைஸ் லைம் சூப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ரைஸ் லைம் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி கூழ்/அரைத்த தக்காளி - 1 கப்
* சிக்கன் ஸ்டாக் அல்லது வெஜிடேபிள் ஸ்டாக் - 2 கப்
* சிக்கன் நெஞ்சுக்கறி - 1 பெரிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* உலர்ந்த கற்பூரவள்ளி/ஆரிகனோ - 1 1/2 டீஸ்பூன்
* சாதம் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி கூழ், ஸ்டாக், மிளகாய் தூள், சீரகப் பொடி, மிளகுத் தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்.
* பின்பு அதில் ஆரிகனோ சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சிக்கனை சேர்த்து குறைவான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் சாதத்தை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், சிக்கன் ரைஸ் லைம் சூப் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
