Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சிக்கன் பிரட்டல்
இந்த வாரம் நீங்கள் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் சிக்கன் பிரட்டல் செய்யுங்கள். இந்த சிக்கன் பிரட்டல் ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த வார விடுமுறை நாளில் ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க விரும்புகிறீர்களா? இந்த வாரம் நீங்கள் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் சிக்கன் பிரட்டல் செய்யுங்கள். இந்த சிக்கன் பிரட்டல் ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் பிரட்டல் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் பிரட்டல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பிரட்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* சின்ன வெங்காயம் - 10-15
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 500 கிராம்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தயிர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா பொருட்கள்..
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் நன்கு வறுத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் வெங்காயம், வறுத்த மசாலா பொடி, உப்பு சேர்த்து கிளறி, பின் அதில் கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு மற்றும் சிக்கனை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் வெளிவர ஆரம்பிக்கும் போது, எண்ணெய் ஊற்றி கிளறி, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கன் நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதில் தேங்காய், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறினால், சிக்கன் பிரட்டல் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
