Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
இந்த வாரம் சிக்கன் வெச்சு.. ஒருடைம் சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்களேன்..
Chicken Kondattam Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட ரெசிபியை ட்ரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.
உங்களின் விடுமுறை நாளை சிறப்பாக கொண்டாட நிச்சயம் இந்த சிக்கன் கொண்டாட்டம் ஏற்ற ரெசிபியாக இருக்கும். இந்த சிக்கன் கொண்டாட்டம் சப்பாத்தி, பூரி, சாதம், பரோட்டா என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - சிறிது
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் உப்பு,
மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கடலை மாவு, அரிசி மாவு, சோள
மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து
பொரித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து குறைவான தீயில்
வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, 10
நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
சிக்கன் கொண்டாட்டம் தயார்.



Click it and Unblock the Notifications