Latest Updates
-
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்!
Dal Chicken Recipe : சிக்கன் தால்
அடுத்த முறை சிக்கன் வாங்கினால் அதைக் கொண்டு சிக்கன் தால் செய்து சுவையுங்கள். இந்த சிக்கன் தால் சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
நீங்கள் சிக்கன் பிரியரா? சிக்கனை பலவாறு சமைத்து ருசித்திருக்கிறீர்களா? அதுவும் சிக்கனைக் கொண்டு தால் செய்து சுவைத்திருக்கிறீர்களா? என்ன புரியவில்லையா? அதாவது சிக்கன் தால் செய்து சுவைத்துள்ளீர்களா? இல்லையா? அப்படியானால் அடுத்த முறை சிக்கன் வாங்கினால் அதைக் கொண்டு சிக்கன் தால் செய்து சுவையுங்கள். இந்த சிக்கன் தால் சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 250 கிராம்
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2-3 கப்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து மூடி வைத்து சிக்கனை 25 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, 15 நிமிடம் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
* அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதை இறக்கி வைத்துள்ள பருப்புடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சிக்கன் தால் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











