Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு இந்த அட்டகாசமான செட்டிநாடு வெள்ளைக் குருமா செய்யுங்க... எத்தனை சப்பாத்தி சுட்டாலும் பத்தாது...!
Chettinad White Kurma Recipe in Tamil: காலை மற்றும் இரவு உணவை பொறுத்தவரை என்ன செய்கிறோம் என்பதை விட அதற்கு என்ன சைடிஷ் செய்கிறோம் என்பதுதான் மிகவும் கடினமான விஷயமாகும். பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைதான். இதற்கு பெரும்பாலும் சட்னி அல்லது சாம்பார், சில சமயங்களில் குருமா போன்றவற்றை செய்வோம்.
சிலநாட்களிலேயே அவை போரடித்து விடும், அதுபோன்ற சூழலில் புதிய சைடிஷ்க்காளி செய்ய வேண்டியது கட்டாயமாகும். அப்படி நீங்கள் புதிய சைடிஷ் செய்ய விரும்பினால் இந்த செட்டிநாடு வெள்ளைக் குருமா அதற்கு சிறந்த சாய்ஸாக இருக்கும். செட்டிநாடு உணவுகள் என்றாலே சுவையான உணவுகளாக இருக்கும் என்ற கருத்து மக்களிடையே உள்ளது.

இந்த செட்டிநாட்டு வெள்ளைக் குருமா இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் சூப்பரான சைடிஷாக இருக்கும். இந்த வெள்ளைக்குருமா சுவையானது மட்டுமல்ல செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. இந்த பதிவில் சூப்பரான செட்டிநாட்டு வெள்ளைக் குருமாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பீன்ஸ் கால் கப்
- காரட் கால் கப்
- காலிப்ளவர் - கால் கப்
- பச்சை பட்டாணி - கால் கப்
- உருளைக்கிழங்கு - கால் கப்
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- நறுக்கிய தக்காளி - 1
மசாலா அரைக்க:
- தேங்காய் - அரை மூடி
- பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- சோம்பு - 1/4 ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 5
- பூண்டு - 2 பல்
தாளிக்க:
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சிறிது உப்பு போட்டு வதக்கவும், தக்காளி நன்கு குலையும் வரை வதக்கவும்.
- மேலும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் காய்கறி கலவையை சேர்த்து நன்றாக வதக்கி சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இந்த கலவை நன்றாக கொதித்து வரும் சமயத்தில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்.
-
- காய்கறிகள் நன்றாக வெந்த பின் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடவும்.'
- அட்டகாசமான செட்டிநாடு வெள்ளைக் குருமா ரெடி. இதை சூடான சப்



Click it and Unblock the Notifications