Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
Chettinad Kara Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து அலுத்துப் போய்விட்டதா? அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து அலுத்துப் போய்விட்டதா? அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு செய்யுங்கள். இந்த கார குழம்புடன் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 1/4 கப்
குழம்பு செய்வதற்கு...
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* கத்திரிக்காய் - 2 (வெட்டிக் கொள்ளவும்)
* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - 1 கப்
* சாம்பார் பவுடர் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம், மல்லி, சோம்பு, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து, அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து 2-3 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், வெல்லம், புளிச்சாறு, சாம்பார் பவுடர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளித்து, குக்கரில் ஊற்ற வேண்டும்.
* பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மசாலாவையும் சேர்த்து கிளறி, நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications