Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை
ங்கள் செட்டிநாடு ரெசிபியை விரும்பி சாப்பிடுபவரானால், இறாலைக் கொண்டு ஒரு செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது மிகவும் சுலபம்.
விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவோம். அதுவும் நீங்கள் இறால் பிரியர் என்றால், இந்த வார இறுதியில் அந்த இறாலைக் கொண்டு ஒரு சுவையான சைடு டிஷ்ஷை செய்து சாப்பிடுங்கள். அதிலும் நீங்கள் செட்டிநாடு ரெசிபியை விரும்பி சாப்பிடுபவரானால், இறாலைக் கொண்டு ஒரு செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இறால் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - சிறிது
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் எடுத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மிளகு சீரக பொடி, கரம் மசாலா, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி 7-8 நிமிடம் இறாலை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: hattyfoods



Click it and Unblock the Notifications