Latest Updates
-
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
பன்னீரை இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களை ஏமாற்றும் திருட்டு குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
முகத்தில் கருந்திட்டுக்கள் அதிகமா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
இறந்தவர்கள் உடலை எரித்தாலும் இந்த ஒரு பாகம் மட்டும் அழியாதாம் - அது எந்த உறுப்பு தெரியுமா? -
Aadi 2026: ஆடி மாதத்தில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
Chettinaad Prawn Chukka Recipe : செட்டிநாடு இறால் சுக்கா
நீங்கள் இறால் பிரியரா? செட்டிநாடு ஸ்டைல் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியானால் இந்த வார விடுமுறையில் இறால் கொண்டு ஒரு செட்டிநாடு ரெசிபியை செய்யுங்கள். அது தான் செட்டிநாடு இறால் சுக்கா.
நீங்கள் இறால் பிரியரா? செட்டிநாடு ஸ்டைல் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியானால் இந்த வார விடுமுறையில் இறால் கொண்டு ஒரு செட்டிநாடு ரெசிபியை செய்யுங்கள். அது தான் செட்டிநாடு இறால் சுக்கா. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இதன் சுவை சிக்கன், மட்டன் சுக்காவைப் போன்று இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு இறால் சுக்கா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இறால் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இறால் - 250 கிராம் (சுத்தம் செய்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* புளி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* உப்பு மற்றும் மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 1
* கல்பாசி - சிறு துண்டு
* அன்னாசிப்பூ - சிறு துண்டு
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* வரமிளகாய் - 1
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து குறைவான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். மசாலாவில் இருந்து நீர் வற்றி, எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் இறாலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலா இறாலுடன் நன்கு ஒன்று சேர கிளறி விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, 3-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறால் வெந்ததும், அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு இறால் சுக்கா தயார்.
Image Courtesy: vidyascooking



Click it and Unblock the Notifications