Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செட்டிநாடு பூண்டு ரசம்
செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது செட்டிநாடு ரெசிபிக்கள். இந்த வகை ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவ சமையல் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அற்புதமாக இருக்கும். அதிலும் செட்டிநாடு ரசம் ரெசிபிக்கள் நன்கு காரசாரமாக அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு சளி பிடித்திருந்தால், செட்டிநாடு பூண்டு ரசம் செய்து சாப்பிடுங்கள்.

கீழே செட்டிநாடு பூண்டு ரசம் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/4 கப்
* புளி - 20 கிராம் (1 கப் சுடுநீரில் ஊற வைக்கவும்)
* தக்காளி - 3 (நறுக்கி அரைத்தது)
* நெய் - 1 டேபிள் பூன்
* கடுகு - 1/2 டீபூன்
* சீரகம் - 1/2 டீபூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீபூன்
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* மிளகுத் தூள் - 1/2 டீபூன்
* சீரகப் பொடி - 1/2 டீபூன்
* மல்லித் தூள் - 1-1/2 டீபூன்
* மிளகாய் தூள் - 1 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீபூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
* பின் ஊற வைத்துள்ள புளியை கையால் பிசைந்து, ஒரு கப் அளவில் புளி நீர் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்பு தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் சீரகத்தைப் போட்டு தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
* பின் அரைத்த தகிகாளி, புளி நீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு அதில் ஒரு கப் அல்லது தேவையான அளவு நீரை ஊற்றி, மிதமான தீயில் நுரைக்கட்டும் வரை சூடேற்றவும்.
* ரசம் ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைத்து, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்தால், சுவையான செட்டிநாடு பூண்டு ரசம் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications