மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா?

Posted By:

Chettinad Nattukozhi Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் நாட்டுக்கோழி அடிக்கடி வாங்குவீர்களா? அப்படி நாட்டுக்கோழி வாங்கினால், அதைக் கொண்டு வெறும் குழம்பு, வறுவல் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை நாட்டுக்கோழி வாங்கினால், அதைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியின் ஸ்பெஷலே அதில் தனியாக அரைத்து சேர்க்கக்கூடிய மசாலா பொடிகள் தான் காரணம்.

Chettinad Nattukozhi Gravy How To Make Chettinad Country Chicken Gravy

உங்களுக்கு இந்த செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுள்ளப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு...

* மிளகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10

தேங்காய் விழுதிற்கு...

* முந்திரி - 2
* துருவிய தேங்காய் - 1/3 கப்
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* நாட்டுக்கோழி - 1 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* தேங்காய் விழுது
* செட்டிநாடு மசாலா - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, நீரில் நன்கு 2-3 முறை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் தேங்காய், முந்திரி, கசகசா சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சோம்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மிளகு மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நாட்டுக்கோழியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் விழுது சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் செட்டிநாடு மசாலாவை சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 4, 2026, 14:23 [IST]
Desktop Bottom Promotion