Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...!
Chettinad Muttai Kurma Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டைக் குழம்பை செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக இருக்கும். இந்த முட்டை கிரேவியை செய்வது மிகவும் சுலபம்.
இந்த செட்டிநாடு முட்டைக் குருமா தோசை, சப்பாத்திக்கு மட்டுமின்றி
சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சூப்பரான
முட்டைக் குழம்பை செய்வதற்கு ஸ்பெஷலான பொருட்கள் எதுவும் தேவையில்லை,
ஆனால் இதற்கென ஒரு தனித்துவமான மசாலாவை அரைக்க வேண்டும். இந்த
குழம்பின் தனித்துவமான சுவைக்கு காரணமே இந்த மசாலாதான்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் முட்டைக் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரசாரமான செட்டிநாடு முட்டைக்குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
- முட்டை - 4
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
- தக்காளி - 2 (அரைத்தது)
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - 2 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- சீரகம் - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு
செய்முறை:
- முதலில் முட்டைகளை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். அவற்றின் ஓடுகளை நீக்கிவிட்டு, முட்டைகளை கீறி தனியாக எடுத்து வைக்கவும்.
- மசாலா வறுத்து அரைக்க, ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் முழு மசாலாப் பொருட்களைச் சேர்த்து, அவை நன்கு வறுபட்டு வாசனை வரும் வரை, மிதமான தீயில் சுமார் 3 நிமிடங்கள் வறுக்கவும்.
- அவற்றை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயுடன் சிறிது உப்பையும் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்னர் கடாயை ஒரு மூடியால் மூடி, வெங்காயம் நன்கு குலையும் வரை வேக வைக்கவும். வெங்காயம் எவ்வளவு வதங்குகிறதோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- இப்போது அரைத்த தக்காளியைச் சேர்த்து, அது வேகும் வரை மேலும் 5 நிமிடங்களுக்குச் சமைக்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் நன்கு கொதிக்க விடவும்.
- எண்ணெய் பிரிந்து நன்கு கொதிக்கும் வரை மூடி வைத்து சமைக்கவும். நன்கு கொதித்ததும் கீறி வைத்த முட்டையை போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்,
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான செட்டிநாடு முட்டைக் குருமா ரெடி!
- இதை சூடான சாதம் அல்லது தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
