Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
பச்சை மிளகாய் இருந்தா இந்த செட்டிநாடு மிளகாய் மண்டியை செய்யுங்க - காரமே இல்லாம சாப்பிட அருமையா இருக்கும்
Chettinad Milagai Mandi Recipe in Tamil: தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. இதற்கு அந்த ரெசிபிக்களில் சேர்க்கப்படும் தனித்துவமான மசாலாக்கள்தான் காரணம். நீங்களும் உங்கள் வீட்டில் வித்தியாசமான செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் இந்த பச்சை மிளகாய் மண்டியை முயற்சி செய்து பாருங்கள். இந்த பச்சை மிளகாய் மண்டி சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் பக்காவான சைடிஷாக இருக்கும்.

பொதுவாக பச்சை மிளகாய் என்றாலே மிகவும் காரமாக இருக்கும் பலரும் அதை பார்த்தாலே பயந்து ஓடுவார்கள். அதனால்தான் அதை பெரும்பாலும் மக்கள் சமையலில் பச்சை மிளகாயை மிகவும் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த பச்சை மிளகாயை வைத்து செட்டிநாடு பகுதிகளில் அட்டகாசமான கிரேவி செய்வார்கள். வித்தியாசமாக சாப்பிட நினைப்பவர்கள் அவசியம் இந்த பச்சை மிளகாய் மாந்தியை முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு செட்டிநாடு பச்சை மிளகாய் மண்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பச்சை மிளகாய் மண்டியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
புளிக் கரைசல் தயாரிக்க:
- 1.5 கப் அரிசி கழுவிய நீர்
- எலுமிச்சை அளவு புளி
குழம்பிற்குத் தேவையானவை:
- 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 20 பல் பூண்டு
- 20 சின்ன வெங்காயம்
- 20 பச்சை மிளகாய்
- 2 தக்காளி (தோல் நீக்கி அரைத்தது)
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி அரிசி மாவு
- 1/4 கப் தண்ணீர்
செய்முறை:
- பெரிய எலுமிச்சை அளவு புளியை 2 கப் அரிசி கழுவிய நீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். புளி ஊறிய பிறகு, நன்றாகப் பிசைந்து அதிலுள்ள சாறு முழுவதையும் எடுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைக்கவும். தக்காளியின் மேல் பகுதியில் லேசாக கீறி, 3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடித்துவிட்டு தக்காளியின் தோலை நீக்கவும். பின்னர் தக்காளியை மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும், பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, அவை நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்துக் கிளறவும். தக்காளி வெந்து, அதிலுள்ள ஈரப்பதம் வற்றிச் சுருளும் வரை வதக்கவும்.
- பிறகு உப்பு மற்றும் புளிக் கரைசலைச் சேர்க்கவும்.
- அடுப்பை அதிக தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாகத் தொடங்கும் வரை கிளறவும்.
- 10 நிமிடங்களுக்குப் பிறகு, குழம்பு ஓரளவு கெட்டியான பதத்தில் இருக்கும். ஒருவேளை குழம்பு மிகவும் தண்ணியாக இருந்தால், கால் கப் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவை கரைத்து குழம்பில் சேர்க்கவும்.
- குழம்பு கெட்டியாகும் வரை ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- அவ்வளவுதான் செட்டிநாடு பச்சை மிளகாய் மண்டி ரெடி. இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications