Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
செட்டிநாடு மசாலா சீயம்
செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. பலருக்கும் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய விரும்புவார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் அப்படி செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் செய்ய விரும்பினால், மசாலா சீயம் செய்யுங்கள்.
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. பலருக்கும் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய விரும்புவார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் அப்படி செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் செய்ய விரும்பினால், மசாலா சீயம் செய்யுங்கள். இந்த மசாலா சீயம் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சாப்பிட சூப்பராக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மசாலா சீயம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மசாலா சீயம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1/2 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் குறைந்தது 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சரில் போட்டு, லேசாக நீர் தெளித்து தெளித்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, உப்பு தூவி வதக்கி, துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வதக்கி வைத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், மாவை உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான செட்டிநாடு மசாலா சீயம் தயார்.
குறிப்பு:
* மாவை எண்ணெயில் போடும் போது வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
* மாவை கிரைண்டரில் போட்டு அரைத்தால் மாவு இன்னும் மெதுமெதுவென்று வரும்.
* நீங்கள் அரைத்த மாவு மிகவும் நீராக இருந்தால், அத்துடன் சிறிது அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக சேர்த்து விட வேண்டாம்.
* பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தினால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
