Latest Updates
-
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா?
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
Chettinad Kandarappam Recipe in Tamil: செட்டிநாடு உணவுகள் என்றாலே மிகவும் வித்தியாசமானாதாகவும், சுவையானதாகவும் இருக்கும். செட்டிநாடு இனிப்புகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் இப்போது நாம் பார்க்கப்போகும் கந்தர் அப்பமானது சுவையானதாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அதனை சுவையானதாக மாற்றுவதோடு மிகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றுகிறது. இந்த கந்தரப்பம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் கந்தரப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கந்தரப்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பச்சரிசி
- 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 கப் வெல்லம்
- 4 டேபிள் ஸ்பூன் தேங்காய்
- ஒரு சிட்டிகை உப்பு
- ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள்
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
செய்முறை:
- ஒரு கப் பச்சரிசியை சரியாக அளந்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் 2 ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றும் 2 ஸ்பூன் கடலைப்பருப்பைச் சேர்க்கவும்.
- இந்த கலவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- இதை நன்றாகக் கழுவி, நீரை வடித்துவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- வெல்லம் சேர்த்தால் மாவு நீர்த்துப்போகும் என்பதால், அரைக்கும்போதே மாவு கெட்டியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
- பின்னர் 1 கப் வெல்லம் மற்றும் 4 மேசைக்கரண்டி தேங்காய் சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். வெல்லம் சேர்ப்பதால் மாவு இளகும் என்பதால், குறைவான தண்ணீர் சேர்க்கவும்.
- அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். அதனுடன் ¼ ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவு ஊற்றும் பதத்தில் இருக்க வேண்டும்.
- ஒரு ஆழமான மற்றும் வளைந்த கரண்டியைப் பயன்படுத்தி ஒரு கரண்டி மாவை எடுக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் மாவை ஊற்றவும். மிதமான தீயில் வேகவைக்கவும்.
- சில நொடிகளிலேயே அது மேலே உப்பி வரும்.
- இப்போது அதைத் திருப்பிப் போட்டு வேகவைக்கவும்.
- இருபுறமும் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரும் வரை வேகவைக்கவும்.
- மீதமுள்ள மாவையும் இதேபோல் ஊற்றி வேகவைக்கவும். இந்த அப்பத்தின் விளிம்புகள் மொறுமொறுப்பாகவும், உள்ளே பஞ்சுபோல மென்மையாகவும் இருக்கும்.
- இந்த கந்தர் அப்பத்தை சூடாக பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
