Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
சீஸ் கார்லிக் பிரட்
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் சீஸ் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய சீஸ் கார்லிக் பிரட் செய்யுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் சீஸ் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய சீஸ் கார்லிக் பிரட் செய்யுங்கள். இந்த சீஸ் கார்லிக் பிரட் நல்ல ருசியாக இருப்பதோடு மட்டுமின்றி, வயிற்றையும் நிரப்பும். குறிப்பாக சீஸ் கார்லிக் பிரட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு சீஸ் கார்லிக் பிரட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீஸ் கார்லிக் பிரட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
* பிரட் துண்டுகள் - 5
* எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 பல் (துருவியது)
* உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/4 டீஸ்பூன்
* மொஸெரெல்லா சீஸ் - 1 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ஆலிவ் ஆயில், துருவிய பூண்டு, உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பிரட் துண்டுகளின் மீது இந்த எண்ணெயைத் தடவ வேண்டும்.
* பின்பு அதன் மேல் துருவிய மொஸெரெல்லா சீஸ் தூவி விட வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல் அல்லது தவாவை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும், இந்த பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக கல்லில் வைத்து குறைவான தீயில், சீஸ் உருகும் வரை வைத்து எடுத்தால், சுவையான சீஸ் கார்லிக் பிரட் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications