Latest Updates
-
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!
சீனி பணியாரம்
வீட்டில் மைதா, சர்க்கரை இருந்தால் போதும், அதைக் கொண்டே ஒரு சுவையான பணியாரம் செய்யலாம். இந்த பணியாரத்தின் பெயர் சீனி பணியாரம் அல்லது மைதா பணியாரம்.
பணியாரம் அனைவருக்குமே சாப்பிட பிடிக்கும். நீங்கள் பணியாரத்தை விரும்பி சாப்பிடுபவரானால், உங்களுக்காக ஒரு ஈஸியான பணியார ரெசிபியைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த பணியாரத்திற்கு மாவு எதையும் தனியாக அரைக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் மைதா, சர்க்கரை இருந்தால் போதும், அதைக் கொண்டே ஒரு சுவையான பணியாரம் செய்யலாம். இந்த பணியாரத்தின் பெயர் சீனி பணியாரம் அல்லது மைதா பணியாரம்.

உங்களுக்கு சீனி பணியாரம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீனி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
* பால் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, சமையல் சோடா, ஏலக்காய் பொடி மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து ஓரளவு கெட்டியாக, கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு ஸ்பூன் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சீனி பணியாரம் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
