Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
Chana Masala Recipe in Tamil: சன்னா மசாலா
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹோட்டலில் கொடுக்கப்படும் சன்னா மசாலாவை செய்து கொடுங்கள்.
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹோட்டலில் கொடுக்கப்படும் சன்னா மசாலாவை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இதனால் 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். மேலும் சன்னா மசாலாவை செய்வது மிகவும் ஈஸி.

உங்களுக்கு சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சன்னா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கொண்டைக்கடலை/சன்னா - 2 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் துண்டு
* பூண்டு - 5 பல்
* உலர்ந்த வெந்தயக்கீரை/கசூரி மெத்தி - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சன்னா மசாலா பொடிக்கு...
* பட்டை - 1 சிறிய துண்டு
* ஏலக்காய் - 5
* கிராம்பு - 4
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
செய்முறை:
* கொண்டைக்கடலையை 8 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை முடியாவிட்டால், சுடுநீரில் கொண்டைக்கடலையைப் போட்டு மூடி வைத்து 4 மணிநேரம் ஊற வைத்தால் போதும்.
* பின்னர் ஊற வைத்த கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு, குறைவான தீயில் 20 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்துவிட்டு, விசில் போனதும் குக்கரைத் திறந்து கொண்டைக்கடலையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு சன்னா மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும், வாணலியில் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலா பொடியை சேர்த்து கிளறி வேக வைக்க வேண்டும். அதற்குள் சிறிது வேக வைத்த கொண்டைக்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து, அதை வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து, கொண்டைக்கடலையையும் சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தியை கையால் நசுக்கி சேர்த்து கிளறி, குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், சுவையான சன்னா மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications