Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும்
Chana Masala With Potato Recipe in Tamil: இட்லி, தோசைக்குப் பிறகு பெரும்பாலான வீடுகளில் காலை அல்லது இரவு உணவாக இருப்பது சப்பாத்தி அல்லது பூரிதான். சப்பாத்தி செய்வதற்கு எளிதானதாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அதனால்தான் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் பிரதான விருப்பமாக சப்பாத்தி உள்ளது.

சப்பாத்தி ஆரோக்கியமானது மட்டுமல்ல சரியான சைடிஷுடன் சாப்பிடும்போது சுவையானதும் கூட. சப்பாத்திக்கு ஆஸ்தான சைடிஷ் என்றால் அது உருளைக்கிழங்கு குருமாதான். ஆனால் அது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. எனவே சப்பாத்திக்கு வேறு சைடிஷ் செய்வதே உங்களின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்யும்.
ஆரோக்கியமான சைடிஷ் என்று வரும்போது கொண்டைக்கடலையை வைத்து செய்வது நல்ல தேர்வாக இருக்கும். கொண்டைக்கடலையை உருளைக்கிழங்குடன் சேர்த்து மட்டன் குருமா போல சூப்பரான சைடிஷை செய்யலாம்.
உங்களுக்கு கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கொண்டக்கடலை
- 2 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியவை)
- 1 பெரிய உருளைக்கிழங்கு
- 2 ஸ்பூன் மல்லித் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 பிரியாணி இலை
- 3 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
அரைக்க:
- 2 தக்காளி
- 3 பச்சை மிளகாய்
- 1 இன்ச் இஞ்சி
- 1 கைப்பிடி கொத்தமல்லி
செய்முறை:
- கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கொண்டைக்கடலையையும், உருளைக்கிழங்கையும் குக்கரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, மென்மையாகும் வரை வேகவிடவும். உருளைக்கிழங்கின் தோலை உரித்து, மசித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,பிரியாணி இலையை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- பின்னர் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும்.
- அதன்பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலாவை ஒவ்வொன்றாக சேர்க்கவும். மசாலா பச்சை வாசனை நீங்கி அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
- பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சுண்டல் வேக வைத்த தண்ணீரை சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- சுண்டலை மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- சுண்டல் நன்கு வெந்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்தால் சுவையான கொண்டக்கடலை உருளைக்கிழங்கு குருமா ரெடி!



Click it and Unblock the Notifications