Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
1 துளி கூட எண்ணெய் சேர்க்காம சன்னா மசாலாவை எப்படி செய்றது-ன்னு பார்த்து ட்ரை பண்ணுங்க..
Zero Oil Chana Masala Recipe In Tamil: நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? இரவு நேரத்தில் சப்பாத்தி தான் பெரும்பாலும் சாப்பிடுவீர்களா? உங்கள் டயட்டில் எண்ணெய் எதுவும் சேர்க்கக்கூடாதா? அப்படியானால் அந்த சப்பாத்திக்கு எண்ணெய் சேர்க்காத சைடு டிஷ் தான் செய்து சாப்பிட வேண்டுமா?
உங்களுக்கு சன்னா மசாலா பிடிக்குமா? அப்படியானால் அந்த சன்னா மசாலாவை ஒரு துளி கூட எண்ணெய் சேர்க்காமல் செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், சிறிது கூட எண்ணெய் சேர்க்காமல் அருமையான சுவையில் சன்னா மசாலா செய்யலாம். இந்த சன்னா மசாலா மிகவும் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு எண்ணெய் சேர்க்காமல் சன்னா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நோ ஆயில் சன்னா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சன்னா - 1/2 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* வரமிளகாய் - 5
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சன்னாவை நீரில் 6-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரில் ஊற வைத்த சன்னாவை சேர்த்து, நீரை ஊற்றி, சிறிது
உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வெங்காயம்,
சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சிறிது நீரை
ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் ஜாரில் வதக்கியதை சேர்த்து, அத்துடன் 1 கையளவு வேக வைத்த
சன்னாவை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியில் அரைத்த மசாலாவை சேர்த்து அடுப்பில் வைத்து,
அத்துடன் 1/2 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு பச்சை வாசனை போனதும், அதில் வேக வைத்துள்ள சன்னாவை சேர்த்து,
கரம் மசாலாவைத் தூவி, அத்துடன் சிறிது கொத்தமல்லியைத் தூவி, 1 கொதி
விட்டு இறக்கினால், சுவையான நோ ஆயில் சன்னா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications