Latest Updates
-
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க.. -
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் காரணமே இல்லாமல் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ! -
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவில் சூரியன் முதலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
மதியம் 10 நிமிடத்தில் சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மசாலா செய்யுங்க.. -
வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
ஒல்லியாக இருந்தாலும் கொழுப்புக் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க..
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்
Cauliflower Salna Recipe in Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபனுக்கு சட்னி அல்லது உருளைக்கிழங்கு குருமா செய்து போரடிக்குதா? ஏதாவது புதுசா ஒரு சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப உங்களுக்கான ரெசிபிதான் இது. உங்கள் வீட்டில் காலிஃப்ளவரும், தேங்காய்ப்பாலும் உள்ளதா? அப்ப அதை வைச்சு ஒரு அட்டகாசமான சால்னா செய்யுங்க.

இந்த காலிஃப்ளவர் சால்னா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடனும் சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த சால்னா மிகவும் சுவையானது மற்றும் செய்வதற்கும் மிகவும் எளிதானது. இந்த சால்னா நீங்கள் வைக்கும் வழக்கமான குருமா போல அல்லாமல் ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற சுவையில் இருக்கும். ஒரே மாதிரியான குருமா சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இது புது சுவையைக் கொடுக்கும்.
உங்களுக்கு சுவையான காலிஃப்ளவர் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 2 தக்காளி பொடியாக நறுக்கியது
- 1 காலிஃபிளவர்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 ஸ்பூன் கரம் மசாலாத் தூள்
- 1 கப் தேங்காய்ப் பால்
- 1 ஸ்பூன் சோள மாவு
- தேவையான அளவு உப்பு
- 3 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 துண்டு இலவங்கப்பட்டை
- 1 ஸ்பூன் சீரகம்
- 3 ஏலக்காய்
செய்முறை:
- முதலில் காலிஃபிளவரை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு சேர்த்து, காலிஃபளவர் மென்மையாகும் வரை வேகவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, அதைத் தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதன்பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். அவை நன்கு குழையும் வரை வேகவைக்கவும்.
- பின்னர் வேகவைத்த காலிஃபிளவரைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- பின்னர் கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதை ஒரு கொதி வரும் வரை சூடாக்கி, பின் தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும்.
- இப்போது சோள மாவை தண்ணீரில் கரைத்து, அந்த கலவையை குழம்பில் சேர்த்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும்.
- பின்னர் மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான காலிஃபிளவர் சால்னா ரெடி!



Click it and Unblock the Notifications
