Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
சப்பாத்திக்கு காலிஃப்ளவரை வெச்சு இப்படி ஒருமுறை குருமா செய்யுங்க.. சிக்கன் குருமாவே தோத்துடும்...
Cauliflower Kurma Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான, அதுவும் சிக்கன் குருமாவின் சுவையையே மிஞ்சும் வகையில் ஒரு குருமாவை செய்து, வீட்டில் உள்ளோரை அசத்த நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா?
அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு அற்புதமான குருமாவை செய்யுங்கள். முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள காலிஃப்ளவர் குருமா நிச்சயம் இதுவரை நீங்கள் செய்திருக்காத வகையில் வித்தியாசமான செய்முறையைக் கொண்டிருக்கும். அதே சமயம் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* முந்திரி - 10-12
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் 1
* கிராம்பு - 3
வதக்கி அரைப்பதற்கு...
* வெங்காயம் - 2
* தக்காளி - 1
குருமாவிற்கு...
* காலிஃப்ளவர் - 1
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிப்ளவரை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து,
காலிஃப்ளவர் துண்டுகளையும் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி
வடிகட்டி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முந்திரியை சேர்த்து
லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு,
ஏலக்காய், கிராம்பு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள பொடி, மிளகாய் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து நன்கு மசாலா
காலிஃப்ளவருடன் சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின்பு குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து,
10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காலிஃப்ளவர் குருமா தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications











