Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Carrot Tomato Thokku Recipe in Tamil: கேரட்டை வைத்து பொதுவாக பொரியல், சாம்பார் போன்றவற்றைத்தான் செய்வார்கள், ஆனால் அந்த கேரட்டையும், தக்காளியையும் வைச்சு சட்னி செஞ்சிருக்கீங்களா? இல்லைன்னா, இன்று அந்த கேரட் தக்காளி சட்னியை உங்க வீட்டுல செய்யுங்க. அடுத்தமுறை இட்லி அல்லது தோசை தான் செய்யும் போது வழக்கமான தேங்காய் சட்னி, கார சட்னி போன்றவற்றை செய்யாமல் இந்த கேரட் தக்காளி சட்னியை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த சட்னி இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். உங்கள் குழந்தைகள் கேரட் சாப்பிட மறுத்து வந்தால், அவர்களுக்கு இப்படி சட்னியாக செய்து கொடுங்கள். இதனால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால் அடிக்கடி இந்த சட்னியை செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் கண்களுக்கு மிகவும் நல்லது.
உங்களுக்கு சுவையான கேரட் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய தக்காளி - 4
- நறுக்கிய கேரட் - 2
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - ½ ஸ்பூன்
- வெந்தயப் பொடி - அரை ஸ்பூன் (தேவைப்பட்டால்)
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் நறுக்கிய தக்காளி மற்றும் நறுக்கிய தக்காளி கேரட்டை மிக்சி ஜாரில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். கடுகு வெடிக்கத் தொடங்கியதும், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், மிளகாய் தூள் மற்றும் வெந்தயத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், அதன்பிறகு அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
- கலவை நன்கு கெட்டியானதும், இந்தக் கட்டத்தில், உப்பு மற்றும் சர்க்கரையைச் சேர்க்கவும். அவற்றை நன்றாகக் கலந்துவிட்டு, மேலும் சுமார் 10 நிமிடங்களுக்குக் குறைந்த தீயில் வேகவிடவும்.
- சட்னி நன்கு தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான கேரட் தக்காளி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
