Latest Updates
-
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும்
அடிக்கிற வெயிலுக்கு தோசை மாவு புளிச்சுப் போச்சா? அப்ப அத தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க..
Carrot Onion Dosa Recipe In Tamil: கோடைக்காலம் வந்தாலே பெரும்பாலானோர் சமையலில் சந்திக்கும் ஒரு பிரச்சனை இட்லி, தோசை மாவு புளித்து போவது தான். அதுவும் அரைத்த மறுநாளே வாயில் வைக்க முடியாத அளவில் மாவு புளித்துவிடும். இப்படி மாவு புளித்துவிட்டால், நிறைய பேர் அதை மனம் இல்லாமல் தூக்கி எறிவர். ஆனால் இனிமேல் அப்படி தூக்கி எறியாதீர்கள்.
மாறாக அந்த இட்லி மாவின் புளிப்பை கட்டுப்படுத்தி, நல்ல சத்தான ஒரு தோசை ரெசிபியை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசைக்கு கார சட்னி அல்லது தக்காளி சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும். மேலும் இந்த தோசை வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

உங்களுக்கு புளித்த இட்லி மாவைக் கட்டுப்படுத்தி எப்படி தோசை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புளித்த இட்லி மாவு கொண்டு செய்யக்கூடிய தோசையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளித்த இட்லி மாவு - 2 கப்
* ரவை - 1 கப்
* தண்ணீர் - 1 1/4 கப்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் புளித்த இட்லி மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் 1 கப் ரவையை எடுத்து, அதில் 1 1/4 கப்
தண்ணீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஊற வைத்த ரவையை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த ரவையை புளித்த இட்லி மாவுடன் சேர்த்து, அத்துடன் 2
டேபிள் ஸ்பூன் மைதா மாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அந்த மாவுடன் துருவிய இஞ்சி மற்றும் கேரட், பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத்தை சேர்த்து, பின் அத்துடன் கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற தோசை தயார்.



Click it and Unblock the Notifications
