Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கேரட் பஜ்ஜி
மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் சூடாக சாப்பிட கேட்கிறார்களா? அதுவும் சற்று வித்தியாசமாக சாப்பிட வேண்டுமென்று கேட்கிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரட் இருந்தால், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் வீட்டில் உள்ளோர் சூடாக சாப்பிட கேட்கிறார்களா? அதுவும் சற்று வித்தியாசமாக சாப்பிட வேண்டுமென்று கேட்கிறார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் கேரட் இருந்தால், அதைக் கொண்டு பஜ்ஜி செய்து கொடுங்கள். இந்த கேரட் பஜ்ஜி தனித்துவமான சுவையுடன் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த பஜ்ஜி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு கேரட் பஜ்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.
Image Courtesy: gethascooking



Click it and Unblock the Notifications

