Latest Updates
-
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும்
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க..
Tea Without Milk In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் டீ பிரியரா? அடிக்கடி உங்கள் வீட்டில் டீ தான் போட்டு குடிப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் தான் டீ போட்டு குடிப்பீர்களா? இப்படி ஒரே சுவையில் டீ குடித்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான டீயை குடிக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பால் சேர்க்காமல் டீ போட்டு குடியுங்கள். அதுவும் ஏலக்காய், பட்டை, கிராம்பு ஆகிய மசாலா பொருட்களை தட்டிப் போட்டு, பால் சேர்க்காமல் ஆனால் பால் சுவையுடைய டீ தயாரித்து குடியுங்கள். இப்படி ஒருமுறை டீயை போட்டு குடித்தால், பின் அடிக்கடி இப்படி தான் டீ போட்டு குடிப்பீர்கள்.

உங்களுக்கு இந்த பால் இல்லாத டீயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பால் இல்லாத டீ ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஏலக்காய் - 5
* கிராம்பு - 4
* பட்டை - சிறிய துண்டு
* இஞ்சி - சிறிய துண்டு
* தண்ணீர் - 2 கப்
* டீத்தூள் - 2 1/2 டீஸ்பூன்
* பால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
* வெல்ல சிரப் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் இடி உரலில் 5 ஏலக்காய், 4 கிராம்பு, சிறிய துண்டு பட்டை
சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சியை சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் நீரை ஊற்றி,
அதில் 2 1/2 டீஸ்பூன் டீத்தூள் சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் இடித்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு
கிளறி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதித்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் பால் பவுடரை சேர்த்து,
அத்துடன் கொதிக்க வைத்த டிகாசனை வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து விட
வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் இனிப்பு சுவைக்கு தேவையான அளவு வெல்லத்தை
சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம்
கரைந்ததும், அதை இறக்கி வடிகட்டி, சூடாக இருக்கும் போதே டீயுடன்
சேர்த்து கலந்தால், சுவையான ஏலக்காய் டீ தயார்.



Click it and Unblock the Notifications